வெள்ளி, 28 ஜூலை, 2017

ஐதராபாத் பல்கலை.யில் கார்கில் நினைவு சின்னத்தை இடித்ததால் பரபரப்பு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கார்கில் நினைவு சின்னத்தை பல்கலைக்கழக நிர்வாகிகள் இடித்து தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத் பல்கலை.யில் கார்கில் நினைவு சின்னத்தை இடித்ததால் பரபரப்பு ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஐதராபாத் பல்கலைக்கழகம். பாகிஸ்தானுக்கு எதிராக கார்கிலில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கார்கில் விஜய் திவாஸ் என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு, கார்கில் விஜய் திவாஸ் நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஏ.பி.வி.பி. மாணவர்களில் சிலர் கார்கில் நினைவு சின்னம் ஒன்றை அமைத்தனர். அந்த சின்னத்தின் அருகில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி கார்கிலில் இறந்த படைவீரர்களுக்கு மலர்கள் தூவி, விளக்குகளை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துக்கு கார்கில் நினைவு சின்னம் குறித்து புகார்கள் வந்தன. இதனால் அந்த நினைவு சின்னத்தை இடிக்க நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளூர் போலீசார் உதவியுடன், கார்கில் நினைவு சின்னத்தை இடித்து தள்ளியது. இதுதொடர்பாக ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், “பல்கலைக்கழக வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதியை பல்கலை. நிர்வாகம் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் அகற்றியது வெட்கக் கேடானது. முதலில் தற்காலிக நினைவு சின்னம் அமைக்கவே முடிவு செய்தோம். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் அடாவடி செயலை அறிந்து கொண்ட நாங்கள், விரைவில் நிரந்தரமான நினைவு சின்னம் அமைக்க உள்ளோம். அதற்கு விஜய் சவுக் என பெயரிட்டு அழைப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளனர்.  malalaimalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக