சனி, 15 ஜூலை, 2017

சேலம் ...வீதி விபத்தில் நீதிபதி நாகலட்சுமி ஜோதி மரணம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் சப்- கோர்ட் நீதிபதியாக இருப்பவர் நாகலட்சுமி ஜோதி. இவர் வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு சென்று விட்டு ஆத்தூர் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரது கனவரும் வழக்குரைஞருமான குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இன்று மாலை, 5.00 - மணிக்கு, மல்லியக்கரை அருகில் உள்ள மோட்டூர் அருகில் இருந்த சாலை வளைவில் கார் வந்தபோது, எதிரில் வந்த ஒருவரின் மோட்டர் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்துள்ளது. இதில், காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட நாகலட்சுமி ஜோதி வெளியில் இருந்த கான்கிரிட் சுவரில் மோதியதில் தலை நசுங்கி பலியானார். சீட் பெல்ட் அணிந்திகுந்த காரணத்தால் அவரது கணவர் குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக