வெள்ளி, 28 ஜூலை, 2017

தோழர் மதிமாறனின் காப்பி + கமலஹாசன் பற்றிய அபத்தங்கள் .. ...?


காப்பி ஏதோ பார்ப்பனர்களின் சாதி சான்றிதழ் என்பது போல தோழர் மதிமாறன் பேசி உள்ளார்.  பிரெஞ்சு மக்கள் காப்பி அதிகம் அருந்துவார்கள். பிரித்தானியர்கள்  தேநீர் அதிகமாக அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். காப்பி, தேநீர் , குளிர்பானங்கள் அல்லது வைன் போன்றவை எல்லாம் அந்தந்த நாட்டு மக்களின் சீதோஷ்ண நிலை மற்றும் உணவு பழக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். எல்லாவற்றையும் பார்ப்பனீயத்தோடு தொடர்பு படுத்தி பார்க்கவேண்டியதில்லை. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போன்ற சிந்தனை பார்பநீயத்துக்கு எதிரான பார்வையை கேலிக்கு உரியதாக்கி விடும்,
அடியேன்  எல்லாவிதமான மாமிசங்களையும் உண்டிருக்கிறேன் அப்பொழுதெல்லாம்  எனக்கு உண்மையில் தேநீர் மிகவும் விருப்பமாக  இருந்தது, ஆனால்  வெறும் தாவர உணவை மட்டுமே உண்ணும் பொழுதெல்லாம் எனக்கு காப்பியே மிகவும் விருப்பமான தேர்வாக இருந்திருக்கிறது . காப்பியில் அதிகம் பித்தம் இருக்கிறது. தாவர உணவுகளில் பித்தம் குறைவு .வாய்வு கபம் போன்றவையே அதிகம் .. மாமிச உணவு பித்தம் நிறைந்தது அதை உண்ணும்பொழுது தேநீர் மிகவும் நன்று, உணவை சீரனமாக்கும் தன்மை தேநீருக்கு மிக அதிகமாக உண்டு,
  மேலும் அதே பேச்சில் கமலஹாசனின் பெயரில் காணமல் போன A எனற எழுத்தை குறிப்பிட்டு தோழர் மதிமாறன் பேசி உள்ளார் . நியு மாராலாஜி நம்பிக்கை காரணமாக அது நேர்ந்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். இருக்கலாம்! ஆனால் அதற்கு வேறு ஒரு காரணம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.   கமலஹாசன்  மத்திய கிழக்கு நாடுகள் பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தான் ஒரு இஸ்லாமியன் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாகவே kamal hassan என இரண்டு முஸ்லிம் பெயர்கள் தனது பெயரில் மறைந்திருப்பதை பயன்படுத்துகிறார்.அது அவரது வியாபாரம் அதை அடியேன் விமர்சிக்கவில்லை . தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தேன் அவ்வளவுதான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக