சனி, 15 ஜூலை, 2017

நீட் .. தமிழக மாணவர்களை வீழ்த்திய துரோக வழக்கறிஞர்கள்.. ராமன் அய்யங்கார் ... நளாயினி (பாஜாக)

Sivasankaran Saravanan : வதந்திகள் எந்தளவுக்கு றெக்கை கட்டி பறப்பவை என்பதற்கும் மையப்பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்ப நைச்சியமாக பரப்பப்படுகின்றன என்பதற்கும் இதுவொரு உதாரணம். தமிழக அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலே தடைபெற்ற வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ராமன் அஇஅதிமுகவை சேர்ந்தவர் என்ற அவதூறு திட்டமிட்டு பரப்பப்படுகிறது . திரு. ராமன் அவர்கள் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் . சீனியர் வழக்கறிஞர்கள் கட்சி சார்பின்றி அரசு வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கும் நடைமுறை உள்ளது. அதன்படி ராமன் திமுக, அதிமுக ஆகிய இரண்டு ஆட்சிகளின் போதும் தமிழக அரசு வழக்கறிஞராக பணி செய்துள்ளார். யார் மீதுள்ள கோபத்தை திசைதிருப்புவதற்காக இதைச்செய்கிறார்கள் என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக