வெள்ளி, 7 ஜூலை, 2017

பேருந்தில் பாஜக பிரமுகர் வன்புணர்வு ... வேலை வாங்கி தருவதாக கூட்டி சென்று விடியோ அம்பலம்


மும்பை: ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த  காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி ரவிந்திர பவந்தடே. இவர் சந்திராபூர் கடந்த 27ஆம் தேதி பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார்.ஓடும் பேருந்தில் சில்மிஷம் மேலும் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிய அவர் அதற்கு அந்தப் பெண் தன்னுடன் வரவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்தக்காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆதாரமான சிசிடிவி காட்சிகள் பாஜக பிரமுகரின் இந்த செயலால் மனமுடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் அந்த பெண் வழங்கியுள்ளார்.< ஒருவாரத்திற்கு பின்பு கைது ஆனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியதை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பின்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்சியிலேயே இல்லை கட்சிரோலி லோக்சபா உறுப்பினரும் மூத்த பாஜக தலைவருமான அஷோக் நேட் பவந்தடே கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை, அவர் கட்சியில் உறுப்பினராகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
கட்சி கூட்டங்களில் பங்கேற்காததால் அவர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.   மாலைமுரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக