வெள்ளி, 14 ஜூலை, 2017

பிக் பாஸ் ... பெரியாரியார் , சிறுபான்மையோர் ஆதரவாம் ... அர்ஜுன் சம்பத் கூறுகிறார்!


Shalin Maria Lawrence · அர்ஜுன் சம்பத் : " பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பெரியாரிஸத்தை புகுத்துகிறார் , சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை வளர்க்கபாக்கிறார் " பிக் பாஸ் நிகழ்ச்சி சிலரின் ஜாதி கோரமுகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது . அவர்கள் குட்டு வெளிப்படுகிறது . மக்கள் கேள்விகேட்கிறார்கள் . இது ஹிந்துதுவாவிற்கு பிரச்சனை . இந்த ஒரு விஷயம்தான் ஹிந்து மக்கள் கட்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோருகிறது . பெரியாரிஸமும் , சிறுபான்மையினர் வளர்ச்சியும் தான் அவர்களை பொறுத்தவரை கலாச்சார சீர்கேடு என்றால் அந்த சீர்கேடு தொடர்ந்து நடக்கட்டும் . வாழ்க பிக் பாஸ் . ஜாதி இல்லை என்று பிதற்றி கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு இது போன்ற ஒரு பிக் பாஸ் காலத்தின் தேவை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக