சனி, 22 ஜூலை, 2017

நடிகை காயத்திரி உதவி இயக்குனர் ஆகிறார்

மின்னம்பலம் :நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நாயகியான காயத்ரி தற்போது ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆறுமுகக்குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் காயத்ரி, பாலாஜி தரணிதரனின் சீதக்காதி படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
இதுகுறித்து BEHIND WOODS-க்கு அவர் அளித்த பேட்டியில், “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குறிப்பிட்ட சில காட்சிகளில் எனது தோற்றம் என் வாழ்நாளிலேயே மறக்கமுடியாததாக இருக்கும். இதுபோன்ற கதாபாத்திரம் இனி கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் நான் படப்பிடிப்புக்கு வரும் போது என்னுடைய காட்சி பற்றி கேட்பதைவிட உடைகள் பற்றி தான் ஆர்வமாக கேட்பேன்.
காட்சிக்காக நான் தயாராகுவதே அருமையாக இருந்தது. விஜய்சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக்கோடு இணைந்து நடித்துள்ளேன். எனது காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டுவிட்டது. பேச் வொர்க் பணிகள் மட்டும் எஞ்சியுள்ளன.
பாலாஜி தரணிதரனின் சீதக்காதி திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதனால் அவரிடம் இந்த படத்தில் நான் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இந்த படத்தில் கண்டிப்பாக நான் பணியாற்றுவேன் என்று கூறினேன். அதனால் உதவி இயக்குநராக இந்த படத்தில் பணியாற்றுகிறேன். சிறப்பு வேடத்திலும் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக