செவ்வாய், 25 ஜூலை, 2017

அடிமைகளே உங்களுக்கு பேச்சுவரும் என்பது ஜெயாவின் மறைவுக்கு பின்தானே தெரியவந்தது!

மனுஷ்ய புத்திரன் :  ஜெயலலிதா இருக்கும் போது கமல் பேசினாரா என்று கேட்கும் அடிமைகளே…உங்களுக்கு பேச்சுவரும் என்பதை நாங்கள் தெரிநதுகொண்டதே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதானே..”
ஜெயலலிதா இருக்கும்போது கமல் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்று அதிமுகவினர் பேசிவருவதற்கு எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் பதில் அளித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பதிவில்,
“கமல் ஏன் ஜெயலலிதா இருக்கும்போது அரசை விமர்சிக்கவில்லை என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து கேட்கிறார்கள். ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை எவ்வளவு கொடூரமாக நடத்துவார் என்பது உலகறிந்த உண்மை. சந்திரலேகா மேல் ஆசிட் வீசப்பட்டது, நக்கீரன் கோபால் கைது என அரசியல் எதிரிகள் மேல் நடத்திய தாக்குதல் எத்தனை..எத்தனை…போட்ட அவதூறு வழக்குககளுக்கு அளவு உண்டா?

கமல் ஒரு நடிகர். அவர் ஜெயலலிதாவிற்கு எதிராக வாயை திறந்தால் அவர் படம் வெளிவரமுடியாது. கமலும் அவரை நம்பியவர்களும் அதில் அழிவார்கள். ஜெயலலிதாவின் அராஜகத்தை எதிர்த்துப்பேசி கலைஞரோ தளபதியோ விளைவுகளை சந்திப்பார்கள். மாபெரும் இயக்கத்தின் தலைவர்கள் அஞ்ச வேண்டியதில்லை. அஞ்ச மாட்டார்கள். ஆனால் கமல் போன்ற ஒருவரால் ஒரு அரசின் ஒடுக்குமுறையை எப்படி சந்திக்கமுடியும்? எப்படி விலை கொடுக்க முடியும்? அப்போது அவர் பேசவில்லை என்பதற்காக ஜெயலலிதாவின் அராஜகங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டதாக அர்ததமா?
மெளனங்கள் எல்லாமே கோழைத்தனமல்ல. அப்போது கமல் மட்டுமல்ல, ஊடகங்கள், நடுநிலையாளர்கள் யாரும் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசவில்லை. திமுகவும் சில சிறிய கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும்தான் தொடர்ந்து போராடின.
சர்வாதிகாரியின் வீழ்ச்சிக்குப்பிறகு மக்கள் தெருவுக்கு வந்து அவரது சிலையை உடைப்பதுபோன்றதுதான் இன்று ஆட்சிக்கு எதிராக வெடிக்கும் விமர்சனங்கள்.
ஜெயலலிதா இருக்கும் போது கமல் பேசினாரா என்று கேட்கும் அடிமைகளே…உங்களுக்கு பேச்சுவரும் என்பதை நாங்கள் தெரிநதுகொண்டதே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதானே..” என்று எழுதியிருக்கிறார். thetimestamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக