திங்கள், 10 ஜூலை, 2017

மலையாள சுப்பர் ஸ்டார் திலீப் கைது ... நடிகை பாவனா கடத்தல் சம்பவத்தில்

Kalai Mathi திருவனந்தபுரம்: பாலியல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருப்பது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாலியல் வழக்கில் கைதாகும் முதல் தென்னகத்து நடிகர் திலீப் ஆவார். பிரபல மலையாள நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியானது. திலீப் கைது இந்நிலையில் நடிகர் திலீப் இன்று காலை விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.


பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் தென்னிந்திய நடிகர் திலீப் ஆவார். இதுவரை தென்னிந்திய நடிகர்கள் யாரும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதில்லை. தென்னிந்தியாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் தொடர்பாக கிசுகிசுக்கள் வருமே தவிர யாரும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதில்லை. இந்நிலையில் திலீப் பாலியல் வழக்கில் முதல்முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை பாவனா பல்சர் சுனிலும் நண்பர்கள் என கூறியிருந்தார்.

அதற்கு கண்டனம் தெரிவித்த மகளிர் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப் அண்மையில் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாகவே நடிகை பாவனாவை பழிவாங்க அவர் பாலியல் துன்புறுத்தல் திட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறத  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக