சனி, 1 ஜூலை, 2017

சவக்குழிக்குள் தள்ளுகிறது': மத்திய அரசு மீது மம்தா தாக்கு

கோல்கட்டா: ‛ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தி, நாட்டின் ஜனநாயகம்

சுதந்திரத்தை, மத்திய அரசு சவக்குழிக்குள் தள்ளுகிறது' என மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:> நாடு முழுவதிலுமுள்ள சிறு வர்த்தகர்களை, ஜி.எஸ்.டி.,யின் மூலம் மத்திய அரசு துன்புறுத்துகிறது. 1947ம் ஆண்டு ஆக., 14 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.ஆனால் 2017, ஜூன் 30 நள்ளிரவில், ஜனநாயகம், சுதந்திரம், சவக்குழிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்தியில் கேலிக்கூத்தான ஆட்சி நடக்கிறது. ஜி.எஸ்.டி., சட்டத்தில், வர்த்தகர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகள் உள்ளன. இதனால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக