வியாழன், 27 ஜூலை, 2017

பார்ப்பனீயம்... திருமுருகன் காந்தியை கைது செய்தது!. மத்திய மாநில கிரிமினல்களின் கூட்டு...

கொஞ்ச நாள் முன்ன என் அண்ணன் என்கிட்டே கேட்டார்,
"திருமுருகன் காந்தியை ஏன் கைது செய்தாங்கன்னு நினைக்குற தம்பி?"ன்னு
ஒரே பதில் "பார்ப்பனீயம்"
திருமுருகன் காந்தி வெறும் அரசு எதிர்ப்பு போராட்டத்திற்காக கைது செய்யப்படவில்லை, மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராடுகிறார் என்று கைது செய்யப்படவில்லை, அவர் எல்லா பிரச்னைகளோடும் சேர்த்து தைரியமாக பார்ப்பனிய அரசாங்கத்தை எதிர்க்க தயங்கியது இல்லை, பாஜக வை சுட்டி காட்ட தயங்கியது இல்லை, தொலைக்காட்சிகளில் தோன்றி ஈயம் பூசியதை போல பேசவில்லை, பெரியாரை சுட்டி காட்டாமல் இருந்ததில்லை, ஈயம் பூசியும் பூசாத மாதிரி பாஜகவின் சாதி இந்துத்துவ அரசியலை மேலோட்டமாக விமர்சித்து சாதி இந்துத்துவத்தின் நிழலாக இருக்கும் டமில் தேக்ஸ் தம்பிகளை போல அல்லாமல், அவர் தலைவனை போல அல்லாமல், மிக உக்கிரமாக தன் விமர்சனங்களை வைத்ததால் மட்டுமே திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
கைதுக்கான காரணம் அது மட்டுமே.
இன்று தோழர் திவ்ய பாரதி கைது செய்யப்பட்டு இருக்கிறார், தோழர் திவ்ய பாரதி சில காலம் முன்னே கக்கூஸ் என்கிற ஆவண படத்தின் மூலம், சமூக இழிவுகளை ஆவணப்படுத்தியவர். இங்கே தங்களின் வாதங்களை தயங்காமல் ஆவணப்படுத்துகிறவர்களை, அது ஆவணப்படுத்தப்பட்ட பிறகு அதன் தாக்கத்தை வைத்து வருகிற வரவேற்பை பொறுத்து குரல்வளையை நெறிக்கும் போக்கை அரசு கையாண்டு கொண்டு வருகிறது.
அடிப்படைவாத அதிகாரத்தின் பிரச்சனை எப்போதுமே ஒன்று தான், "நீ நினைத்ததை பேசி விட்டு போ, ஆனால் நீ பேசியது நாலு பேருக்கு புரியும்படியோ, நாலு பேர் சிந்திக்கும் படியோ, அது mainstream ல் limelight ஆகும்படி இருந்தால்" அதை முளையிலையே கிள்ளி எறிவது தான் அதன் தந்திரம். தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது அது தான்.  வாசுகி பாஸ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக