சனி, 8 ஜூலை, 2017

மாயாவதி : மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக மக்கள் ஏமாற்றி வருகிறது

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்துவரும் பாஜக அரசு, மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே அவர்கள் சாதி மற்றும் மத ரீதியாக மக்களை பிரிக்கும் வகையில் கலவரங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மத்தியிலும் மாநிலத்திலும் மக்களை ஏமாற்றி வருகிறது: பா.ஜ.க மீது மாயாவதி குற்றச்சாட்டு லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து இன்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவுடன் பா.ஜ.க செயல்படுகிறது. பகுஜன் சமாஜ் பற்றி அவர்கள் அவதூறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எங்களுக்கு விடப்பட்டுள்ள இந்த மிரட்டலை சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

மத்திய பா.ஜ.க. அரசின் பசு பாதுகாப்பு திட்டம் தோல்வி அடைந்துள்ளது. இதை மறைக்கவே பா.ஜ.க. அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முன்னெச்சரிக்கை இல்லாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மக்களை கடும் பாதிப்பில் ஆழ்த்திய மத்திய அரசு, அதேபோல், எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் அறிமுகம் செய்த ஜி.எஸ்.டி வரியால் வணிகர்களின் நிலை சிக்கலாகி உள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மாநில வளர்ச்சிக்கான எந்த பணிகளையும் செய்யவில்லை.
சாலை பணிகள், குடிநீர் விநியோகம், மின்சாரம், மருத்துவமனை மற்றும் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசும், மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசும் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது. இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக