திங்கள், 31 ஜூலை, 2017

தங்க இறக்குமதி வரியைக் குறைக்க நிதியமைச்சகத்துக்கு வணிக அமைச்சகம் கோரிக்கை

தங்க இறக்குமதிக்கான வரியைக் குறைக்க நிதியமைச்சகத்துக்கு வணிக அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தங்கத்துக்கான இறக்குமதி வரி 10 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை 2 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று ஒன்றிய நிதித்துறைக்கு ஒன்றிய வணிகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில், சர்வதேச சந்தையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நகைகளின் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வணிக அமைச்சகத்தின் இணைச்செயலாளர் மனோஜ் த்விவேதி வெளியிட்டார்.

இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் தங்கத்தின் விலை குறையும். ஜி.எஸ்.டி-யில் தங்கத்துக்கு விற்பனை வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்கக் கடத்தல் அதிகரிக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கத்தின் இறக்குமதி வரிக் குறைப்பால் தங்கக் கடத்தலும் கட்டுப்படுத்தப்படும். இந்தியர்கள் தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் காட்டுவதால், ஆண்டுக்கு 800 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக