சனி, 8 ஜூலை, 2017

சுதா சிங் ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் !

புவனேஸ்வர்: ஆசிய தடகளம்போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3
ஆயிரம் மீட்டர் தடை தாண்டுதலில் தங்கபதக்கம் வென்றார் .ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 8) நடைபெற்ற போட்டியில் பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டப்பந்தய பைனலில் இந்தியா சார்பில் சுதா சிங், பருல் சவுத்தரி பங்கேற்றனர். இதில் பந்தய துாரத்தை 9 நிமிடம், 59.47 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த சுதா சிங், தங்கம் வென்றார். 4-வது தங்கம் உ.பி.,யை சேர்ந்த இவர், 2010ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார்.
தவிர இது, ஆசிய தடகளத்தில் இவர் வென்ற 4வது பதக்கம் ஆகும்.மற்றொரு இந்திய வீராங்கனை பருல் சவுத்தரி (10 நிமிடம், 22.99 வினாடி) 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். இதனையடுத்து இந்தியா இது வரையில் 7 தங்கப்பதக்கம்வென்று முதலிடத்தில் உள்ளது. தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக