வியாழன், 13 ஜூலை, 2017

எறும்புகள் ... பிள்ளையார் எறும்புகளாய் இருந்தவர்கள் எப்படி செவ்வெறும்புகள் ஆகினர்?

Bharathi Nathan :ஆண்டோ எனும் மாயை சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘எறும்புகள்’
சிறுகதைப் பற்றி...
இது மரம் ஏறும் தொழிலாளர்களைப் பற்றியது. பனைமரத்தில் இயல்பாய் கிடைப்பது கள் மட்டும் தான், தெலுவு எனப்படும் பதநீர் கிடைப்பது அதன் பாளை ஊறலில் சேகாரத்திற்காக செருகப்படும் சட்டியில் சுண்ணாம்பு தடவுவதால் தான். பனையேறும் தொழிலாளர்களுக்கு பிரச்னையே போலீஸ் தான். அவர்களுக்கு மாமூல் தான் முக்கியம். பனையேறும் தொழிலாளர்கள் தெலுவை விடுத்து ஓரிரு மரங்களில் தங்கள் சுய தேவைக்காக கள் போட்டால் கூட, உடனே மூக்கு வேர்த்து கள் கேசு போட வந்து விடுவார்கள். இதை தவிர்த்து தெலுவே போட்டாலும் லோக்கல் போலீசும், கலால் போலீசும் மாமூல் கேட்டு வந்து விடுவார்கள். அவர்களுடனான அராஜகத்திற்கு எதிரான இடைவிடாத அந்தப் போராட்டத்தில் சிக்குண்டு தவிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையே எறும்புகள் சிறுகதை. இதற்கு ஏன், எறும்புகள் என்று தலைப்பு வைத்தேன் என்றால், எறும்புகள் வகையில் யார் மிதித்தாலும் கண்டுக் கொள்ளாமல் போகும் போராட்ட குணமற்ற பிள்ளையார் எறும்புகளும் உண்டு. யாராவது சீண்டினால் திருப்பிக் கடிக்கும் ரோசமான செவ்வெறும்புகளும் உண்டு.
மனிதன் போராட்ட குணமுள்ளவன். குறிப்பாய், மரம் ஏறும் தொழிலாளர்கள் ஒரு பகுதியில், ஆரம்பத்தில் பிள்ளையார் எறும்புகளாய் இருந்தாலும் பிறகு, செவ்வெறும்புகளாய் எப்படி மாறுகிறார்கள்? என்பதே கதைச் சுருக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக