திங்கள், 10 ஜூலை, 2017

தெருவோர கடைகளில் மக்கள் கூட்டம் .. ஜி எஸ் டி சுமையை தவிர்க்க ...


Lakshmi Priya"> சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் விலை
உயர்வை சமாளிக்க தெருக்களில் விற்கப்படும் மளிகை பொருள்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு விதித்திடும் ஜிஎஸ்டி">ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு சட்டத்தை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியது. இதனால் ஹோட்டல்கள் உணவு பொருள்கள், மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள், நகைகள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் மத்திய அரசு இந்த ஜிஎஸ்டியால் வரி ஏய்ப்பாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு என்று கூறி வருகிறது. மாத பட்ஜெட்டில் முக்கிய அங்கம் வகிப்பது மளிகை பொருள்களுக்கான பட்ஜெட். நடுத்தர குடும்பங்களின் தலை மேல் ஜிஎஸ்டி என்ற இடி விழும் பட்ஜெட்டும் இதுதான். இதை திறமையாக கையாள பொதுமக்கள் புதிய திட்டத்தை பின்பற்றுகின்றனர். இதனால் ஜிஎஸ்டிக்கு டிமிக்கி கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்களின் யுத்தி< சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று மளிகை பொருள்களை வாங்கினால்தானே ஜிஎஸ்டி விதிக்கப்படும். தெருமுனைக் கடைகளில் குவியல் குவியலாக விற்கப்படும் கடைகளில் வாங்கினால் பொருள்களுக்கு உண்டான பணத்தை மட்டுமே செலுத்தலாம் என்பதே வாடிக்கையாளர்கள் கையாளும் புதிய யுத்தி ஆகும். இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் தெருமுனைகளில் உள்ள கடைகளில் மளிகை பொருள்களை வாங்கி வருகின்றனர். இதன் மூலம் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஜிஎஸ்டியுடன் அதிக விலைக்கு பொருள்கள் வாங்குவதை தவிர்க்கும் நடவடிக்கையாகவே கருதுகின்றனர். அதிகரித்துள்ள தெருமுனைக் கடைகள்

இதுபோன்று தெருமுனை கடைகளில் எந்த வரியும் இல்லாமல் மளிகை பொருள்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தெருமுனை கடைகள் அதிகரித்து வருகின்றன. வியாபாரமும் சூடு பிடிப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தெருமுனை கடைகளில் விற்கும் பொருள்களின் தரத்தை ப்ராண்டட் பொருள்களுடன் ஒப்பிடும்போது நன்றாக இருப்பதாக இல்லத்தரசிகள் கூறுகின்றனர். கிலோ கணக்கில் அல்லாமல் பண்டைய முறைப்படி படிக்கணக்கில் மளிகை பொருள்கள் அளந்து தரப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக