சனி, 1 ஜூலை, 2017

சென்னை .திமுகவிடம் திருமதி மீரா குமார் ஆதரவு கேட்டார் (படங்கள்)

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள்
சபாநாயகர் மீரா குமார் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக இன்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை, மீரா குமார் சந்தித்தார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். சென்னை லீலா பேலஸ் தனியார் ஓட்டலில் நடந்த இந்நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், டி.கே.ரங்கராஜன், கனிமொழி, டி.ராஜா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.nakkeeran  படங்களை பெரிதாக காண்பதற்கு படங்கள் மீது அழுத்தவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக