வியாழன், 13 ஜூலை, 2017

பாவனாவை நிர்வாணப்படம் எடுக்க நடிகர் திலீப் பணம் கொடுத்தார்?


நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைதாகி 2 நாள் போலீஸ் காவலில் உள்ளார் நடிகர் திலீப். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை பாவனாவை தாக்கி அவரது நிர்வாண போட்டோவை எடுக்க பணம் கொடுத்த விவகாரம் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனாவை சிலர் காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தனர். அது தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உட்பட சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக சமீபத்தில் அவரிடமும், அவரது மேலாளர் அப்புண்ணி மற்றும் இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், பாவனாவை காரில் கடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் கடிதத்தில் தெரிவித்ததை அடுத்து, காவ்யா மாதவனின் கடையில் போலீசார் கடந்த 1-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.


இதில் பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிற்கும், காவ்யா மாதவனுக்கும் எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் திலீப் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட திலீப்பை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாராணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன. நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோ எடுத்து தருமாறு நடிகர் திலீப் கூறியது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டே திலீப் 1.50 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.  வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக