திங்கள், 17 ஜூலை, 2017

BBC :டெல்லியில் மீண்டும் தமிழக விவசாயிகளின் போராட்டம் !

தமிழக விவசாயிகள் டெல்லியில் மீண்டும் தங்களது நூதனப் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை 41- நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய அவர்கள், தாற்காலிகமாக தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு தமிழகம் திரும்பினார்கள். இந் நிலையில், மீண்டும் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு வந்தார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பிரதமர் வீட்டுக்குச் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து, நேற்று நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் துவக்கினார்கள். கால், கைகளை சங்கிலியால் பிணைத்த பூட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக