புதன், 12 ஜூலை, 2017

Air India இனி அய்யர் இந்தியா என்று அழைக்கபப்டும்? சாதா பயணிகளுக்கு மாமிசம் கிடையாது ... உயர் பயணிகளுக்கு கிடைக்கும்

Air India..No  non vegetarian food for economy class passengers 
Muthu Krishnan: இனி இந்தியாவிற்குள் பறக்கும் தங்களது விமானங்களில்
அசைவ உணவு பரிமாறுதல் நிறுத்தப்படுகிறது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இப்படி அசைவ உணவை நிறுத்துவதால் உணவின் தரம் மேம்படும் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அந்த அறிவிப்பை இன்னும் சற்று உற்று நோக்கினால் இந்த அசைவு உணவு தடை என்பது அனைவருக்குமானது அல்ல, அது பணம் கூடுதலாக கொடுத்து BUSINESS CLASSல் பயணிக்கும் வசதிபடைத்தவர்களுக்கானது அல்ல, இந்த தடை என்பது ECONOMY CLASSல் பயணிகளுக்கு மட்டுமே. சாமானியர்களின் உணவு பழக்கங்களின் மீது தொடர்ந்து தாக்குதலை தொடுப்பதன் வழியே இந்தியாவில் வாழும் 88% சதவிகித மக்களை மீண்டும் ஒரு முறை அசிங்கப்படுத்தும் செயலில் இறங்கியுள்ளது பாஜக அரசு.
1. தைரியம் இருந்தால் ஏர் இந்தியாவின் வெளிநாட்டு சேவையிலும் இந்த தடையை விதித்து பார்க்க வேண்டும் பாஜக அரசு

2. தைரியம் இருந்தால் ஏர் இந்தியாவின் BUSINESS CLASS பயணிகளுக்கும் இந்த தடையை நீட்டிக்க வேண்டும் பாஜக அரசு
3.தைரியம் இருந்தால் தனியார் விமானங்களும் இந்த தடையை அமல்படுத்த நிர்பந்திக்க வேண்டும் பாஜக அரசு.
குறிப்பு : இந்தியாவின் ஜனத்தொகையில் 88% பேர் அசைவம் உண்ணுபவர்கள் என்பதை இந்திய அரசின் Anthropological Survey of India தனது புள்ளிவிபர பட்டியலில் ஆண்டு தோறும் அறிவித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக