ஞாயிறு, 30 ஜூலை, 2017

5 ஆண்டுகளில் அமித் ஷாவின் சொத்து 300 மடங்கு உயர்ந்துள்ளது! கடுமையான உழைப்பு ....

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்திலிருந்து போட்டியிடும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 300 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரின் வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமித்ஷா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி அமித்ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில், 'தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த பிரமாணப் பத்திரத்தையும் இணைத்துள்ளார். அதில்,'கடந்த 2012ஆம் ஆண்டு 1.90 கோடியாக இருந்த அவரின் சொத்து மதிப்பு தற்போது 19 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமித்ஷா மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு 300 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு 8.54 கோடியாக இருந்த அமித்ஷா மனைவியின் சொத்து மதிப்பு. தற்போது 34.31 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் அமித்ஷாவின் பரம்பரை அசையும் சொத்து மதிப்பும் 10.38 கோடியாக உள்ளது' என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு வேட்பாளரான ஸ்மிருதி இரானி மற்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது.கடந்த 2014 ஆம் ஆண்டு 4.91கோடியாக இருந்த இவரின் சொத்து மதிப்பு தற்போது 8.88கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் வேட்புமனுவில் ஸ்மிருதி பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக