சனி, 29 ஜூலை, 2017

குஜராத் கூவதூரில் 20 எம்.எல்.ஏ.க்கள்.... மாநிலங்களவை எம்.பி.யை இழக்கிறது காங்கிரஸ்?

காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் சிறைவைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை தேர்தல் வரை இவர்கள் கர்நாடகாவில் பாதுகாப்பாக சுற்றுப்பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைமை செய்துள்ளது. குஜராத்தில் இருந்து மாநிலங்கவைக்கு 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 8-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாரதிய ஜனதா சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரசில் இருந்து தாவிய பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் வெற்றிபெறமாட்டார் என அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் விலகுவதை தடுக்க 41 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்பட்டு சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடக்கும் வரை அவர்களை மாநில முழுவதும் சுற்றுப்பயணம் அழைத்து செல்ல காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் 60 உறுப்பினர்களை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பலம் எம்.எல்.ஏ.க்கள் விலகியதால் 51 குறைந்துள்ளது. மேலும் 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்வார்கள் என்று கூறப்படுகிறது. இதை தடுக்கவே 41 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. dhinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக