வெள்ளி, 21 ஜூலை, 2017

மம்தா பானர்ஜி : 18 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம்....

மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக அரசு, மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருவதாகவும்,எனவே பாஜக-வை வீழ்த்துவதற்காக 18 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்தப்போவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 21 ஆம் தேதி (இன்று) கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. மத்திய அரசு, மாநிலத்தில் ஆளும் அரசுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கின்றது. மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக-வை வீழ்த்துவதற்காக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடு தழுவிய இயக்கம் நடத்த உள்ளோம். இதற்காக வருகிற ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி முதல் பாஜக-விற்கு எதிரான திட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது என்று அவர் தெரிவித்தார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக