செவ்வாய், 25 ஜூலை, 2017

ஊழியர்களை விட 1,200 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ

By: Tamilarasu" இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சராசரியாக ஊழியர்கள் பெறும் சம்பளத்தினை விட 1,200 மடங்கு அதிக வருமானம் பெறுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன"பொதுத் துறை நிறுவனங்கள் " பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் 2016-2017 நிதி ஆண்டிற்கான சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் பல மூத்த நிறுவன தலைவர்களின் சம்பளம் அப்படியே இருந்தாலும், ஊழியர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகள் இடையிலான வேறுபாடு மற்றும் 100 சதவீதங்களுக்கும் அதிகமாகவே உள்ளது.
பொதுத் துறை நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள தலைமை செயல் அதிகாரிகள் ஊழியர்களை விட 3 முதல் 4 மடங்குகள் தான் சம்பளம் பெறுகின்றனர். ஊழியர்களின் சம்பள விவரங்கள் ஊழியர்களின் சம்பள விவரங்களை வெளியிட வேண்டும் என்று நிறுவனங்களுக்குச் செபி எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றாலும் பெரும்பாலான பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், வருடாந்தர அடிப்படையில் முதலீட்டாளர்களுக்குப் பல்வேறு ஊதிய விகிதங்களை வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்க ஒப்புதல் எப்படி இருந்தாலும் உயர் நிர்வாகிகளின் சம்பளம் விளம்பரதார்கள், நிர்வாகக் குழுக்கள் மற்றும் பிற கமிட்டிகள் மற்றும் பங்குதார்கள் ஒப்புதல் பெற்ற பிறகே முடிவு செய்யப்படும்.
தவிர, போதுமான லாபம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் அதிகப்படியான ஊதியங்களுக்கு அரசாங்க ஒப்புதல் தேவை.
சம்பள உயர்வு நிறுவன சட்ட விதிகளின் படி ஒரு உயர் அதிகாரியின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்றால் அவர் நிர்வாக இயக்குனர் போன்று யாராக இருந்தாலும் நிறுவனம் அடைந்த லாபத்தில் 5 சதவீதம் வரையில் மட்டுமே சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும்.
அதே நேரம் நிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது. சென்செக்ஸ்
சென்செக்ஸ் குறியீடுகளில் பட்டியலிடப்பட்ட 30 நிறுவனங்களில் 15 நிறுவன தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு 2016-2017-ல் எவ்வளவு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது என்று வெளியிட்டுள்ளது. விரைவில் 9 நிறுவனங்கள் அறிவிக்கவும் இருக்கின்றன.
சம்பளம் உயர்வு சம்பளம் உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் சில நிறுவன தலைவர்களுக்குச் சம்பள விகிதம் குறைக்கப்பட்டும் உள்ளது.
இப்போது நிறுவனங்கள் வாரியாகச் சம்பள உயர்வு மற்றும் குறைந்த பட்டியலினை இங்குப் பார்ப்போம்.
விப்ரோ
விப்ரோ விபோரோ நிறுவனத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் சம்பளம் சராசரியாக 260 மடங்கில் இருந்து 259 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் தங்களது நிறுவன ஊழியர்களின் வருவாய் சராசரியை விட 283 மடங்கு அதிகச் சம்பளம் வாங்குகின்றனர்.
டாக்டர் ரெட்டிஸ் லேப்
டாக்டர் ரெட்டிஸ் லேப் டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவன உயர் அதிகாரிகளின் சம்பளம் ஊழியர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும் போது 233 மடங்குகள் அதிகமாக உள்ளது.
ஹீரோ மோடோ கார்ப்
ஹீரோ மோடோ கார்ப் இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோடோ கார்ப் உயர் அதிகாரிகளின் சம்பளம் ஊழியர்களின் சம்பளத்தினை விட 731 மடங்குகள் அதிகமாக உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம்
ரிலையன்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டுச் சம்பள விகிதங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை. முகேஷ் அம்பானி அவர்கள் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் பெற்று வருகின்றார். இங்குப் பணி புரியும் உயர் அதிகாரிகளின் சம்பளம் ஊழியர்களின் சராடரியுடன் ஒப்பிடும் போது 250 மடங்குகள் அதிகமாக உள்ளது.
டிசிஎஸ்
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் சம்பளத்தின் சராசரியினை விட உயர் அதிகாரிகள் 515 மடங்குகள் வரை அதிகச் சம்பளங்கள் பெறுகின்றனர்.
அதானி குழுமம்
அதானி குழுமம் அதானி குழுமத்தின் உயர் அதிகாரிகளின் சம்பளம் ஊழியர்களை விட இந்த ஆண்டு 169 மடங்காக அதிகரித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ பஜாஜ் ஆட்டோ நிறுவன உயர் அதிகாரிகளின் சம்பளம் ஊழியர்களை விட 522 மடங்கு அதிகமாக உள்ளது.
எச்டிஎப்சி
எச்டிஎப்சி எசிடிஎப்சி வங்கி உயர் அதிகாரிகளின் சம்பளம் ஊழியர்களை விட அதிகபட்சமாக 197 மடங்குகள் வரை அதிகரித்துள்ளது.
எல்அண்ட்டி
எல்அண்ட்டி எல்அண்ட்டி நிறுவன ஊழியர்களின் சம்பளத்தினை விட அதிகபட்சமாக உயர் அதிகாரிகள் 1004 மடங்கு வரை சம்பளம் வாங்குகின்றனர்.
பிற முக்கிய நிறுவனங்கள்
பிற முக்கிய நிறுவனங்கள் ஏர்டெல் 366 மடங்குகள், சிப்லா 416 மடங்குகள், எம் அண்ட் எம் 108 மடங்குகள், டாடா ஸ்டீல் 94 மடங்குகள் மற்றும் எச்யூஎல் 138 மடங்குகள் வரை உயர் அதிகாரிகள் ஊழியர்களை விட அதிகமாகச் சம்பளமாகப் பெறுகின்றனர்tamil.goodreturns.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக