திங்கள், 5 ஜூன், 2017

பாஜக பேச்சாளரை வெளியேற்றிய NDTV நெறியாளர் நிதி ரஸ்தான் வீட்டில் சி பி ஐ சோதனை.. மோடி வீட்டு நாய் போல் செயல்படும் சி பி ஐ?


மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் மாடுகளை இறைச்சிக்காக
வெட்டுவதற்கு தடை விதித்தது. அதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விவாதம் ஒன்றை நடத்தியது. அந்த விவாதத்தை நெறியாள்கை செய்தவர் நிதி ரஸ்தான் என்ற பத்திரிகையாளர்.  இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரதிநிதி, மனித உரிமை செயல்பாட்டாளர், திமுக பிரதிநிதி, பாஜக செய்தி தொடர்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தால் கட்சியில் இருக்க மாட்டேன் என அறிவித்திருந்தார். அதுகுறித்து நிதி ரஸ்தான் கேட்ட கேள்விக்கு பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா என்பவர், “உங்களுக்கு(எண்டீடிவிக்கு) மறைமுக அஜெண்டா இருக்கிறது” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதற்கு இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை பேச வேண்டாம் என அறிவுறுத்தினார் நிதி. சம்பித் பாத்ரா தொடர்ந்து ‘மறைமுக அஜெண்டா’ குறித்து பேச நீங்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறலாம் என அறிவித்தார் நெறியாளர்.

இந்நிலையில் இந்த வெளியேற்ற நிகழ்வுதான் எண்டீடிவி நிறுவனர் வீட்டில் சிபிஐ சோதனைக்குக் காரணம் என பலர் சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

மனுஷ புத்திரன் :இந்த தொலைக்காட்சி விவாததிற்காகத்தான் என் டி டி வி மேல் ரெய்டு...சம்பித் பாத்ரா போன்ற ஆசாமிகள் தமிழக பா.ஜ.கவிலும் அநேகர் உண்டு. ஆனால் அவதூறு பேசும் பேச்சாளர்களை தயங்காமல் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளும் ஊடகவியலாளர்கள் அரிது.
வீரமங்கை நிதி ரஸ்தான் நாச்சியாருக்கு விரைவில் ரசிகர் மன்றம் அமைக்கப்படும். thetimestamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக