ஞாயிறு, 11 ஜூன், 2017

போயஸ் கார்டனில் என்ன நடந்தது! லைவ் ரிப்போர்ட் #LiveRepor விகடன்

போயஸ் கார்டன்
காவலர்களின் தள்ளு முள்ளு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டனுக்குச் சென்று, ''போயஸ் கார்டன் எனக்குத்தான் சொந்தம்'' என்று சொன்னதால்... டி.டி.வி.தினகரனின் ஆட்கள் அவரை உள்ளே விடாமல், வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவைத்தனர். இதனால், போயஸ் கார்டன் பகுதி முழுவதும் பரபரப்பாக இருந்தது.
தாக்கப்பட்ட பத்திரிகையாளர் ''எனக்கு ஜெயலிதாவின் சொத்துகள் எதுவும் வேண்டாம். நான் அவற்றுக்காக அலைபவர் அல்ல. என் அத்தை பயன்படுத்திய பேனா ஒன்றுபோதும்'' என்று அன்று சொன்னவர் தீபா. இந்த நிலையில், இன்று காலை திடீரென்று போயஸ் கார்டனுக்குச் சென்றார் தீபா. அவர் சென்ற சிறிது நேரத்தில்... அவரது கணவர் மாதவனும் அங்குப் போய்ச் சேர்ந்தார். இருவரும் வேதா நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால், டி.டி.வி.தினகரனின் ஆட்கள் அவர்களை உள்ளே விடவில்லை. வீட்டின் வாசலிலேயே நிறுத்திவைத்தனர். இதனால், தீபாவின் ஆதரவாளர்கள் மற்றும் தினகரனின் ஆதரவாளர்களால் கூச்சல் ஏற்பட்டது. இதன்காரணமாக அங்கு போலீஸ்காரர்கள் நூற்றுக்கணக்கில் வரவழைக்கப்பட்டுக் குவிக்கப்பட்டனர்.

காவலர்கள், பத்திரிகையாளர்களைத் தடுத்து நிறுத்துவதிலேயே குறியாக இருந்தனரே தவிர, உள்ளே தினகரனின் ஆட்கள் செய்த அட்டூழியங்களை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தீபாவைப் படம் பிடிக்கப்போன தனியார் தொலைக்காட்சி நிருபர் ராகவ் மற்றும் புகைப்படக்காரர் சஞ்சீவ் ஆகியோரை... அங்கு காவலுக்கு நின்ற போயஸ் கார்டன் தனியார் காவலாளிகள் கடுமையாகத் தாக்கினர். அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தபோதிலும், அவர்கள் தாக்குவதை நிறுத்தவேவில்லை. இந்தச் சம்பவத்தைக் காவல் துறையினர் அருகில் இருந்து வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரையும் தடுக்கவில்லை. அதிலும், குறிப்பாக அவர்களுடைய மொபைல் போன், கேமரா போன்றவற்றைக் காவலர்களின் கண்ணெதிரிலேயே தினகரனின் ஆட்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "நாங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஆயிற்று, அவர்கள் ஆயிற்று'' என்று அலட்சியமாகப் பதில் அளித்தனர்.
அதன்பின் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் மட்டும் வேதா நிலையத்தின் வாசலிலேயே உட்கார்ந்திருந்தனர். மற்றவர்கள் அனைவரும் காவலர்களால் அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். கடைசிவரை தீபா மற்றும் அவரது கணவர் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இருவரும், அங்கு சில மணி நேரம் அமர்ந்திருந்தனர். பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தீபா, ''இது என் அத்தையின் சொத்து. இந்தச் சொத்தில் எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறதே தவிரம் வேறு யாருக்கும் உரிமை இல்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு என் அத்தையைச் சசிகலா குடும்பத்தினர் கொன்றுவிட்டனர். இப்போது என்னையும் என் கணவரையும் கொல்லப் பார்க்கிறார்கள். போயஸ் கார்டன் இல்லத்தைச் சட்டரீதியாக எங்களுக்கு உரிமைகோரத்தான் தீபக் என்னை இங்கு வரச் சொன்னார். நானும் அதை நம்பித்தான் இங்கு வந்தேன். ஆனால், என்னைத் திட்டமிட்டு வரவழைத்து என்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். என் அத்தையின் வீட்டுக்குள் செல்லக்கூட என்னை அனுமதிக்கவில்லை. இது சம்பந்தமாகப் பிரதமரைப் பார்க்கப்போகிறேன்" என்றார்.
காவலர்கள்
 வேதா நிலையத்துக்கு வெளியே தீபாவும், மாதவனும் இருக்கும் போது, தீபாவின் தம்பி தீபக் அங்கு வருகை தந்தார். அப்போது தீபா அவரை அத்தையின் சாவுக்கு நீதான் காரணம், சசிகலாவிடம் விலை போய் விட்டாய் நீ. என்ற கத்த தொடங்கினார். அப்போது தீபா பேரவையில் உள்ள ராஜா என்பவர். மாதவனை எங்கள் வீட்டில் திருடி சென்ற நீயெல்லாம் இங்கு எதற்காக வந்தாய் என்று கடுமையாக திட்டினார். வேதா நிலையத்துக்கு தீபா, மாதவன், தீபக், ராஜா ஆகியோருக்குள் அடிதடி சண்டை மட்டும் தான் ஏற்ப்படவில்லை. மற்றப்படி கடுமையாக திட்டிக்கொண்டார்கள்.
தீபா என்ன நோக்கத்துக்காகப் போயஸ் கார்டன் வந்தார்... அவரது கோரிக்கை என்ன என்பதை அமைதியான முறையில் அறிந்திருக்க முடியும். ஆனால், அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்திள்ளனர். அத்துடன், அங்கு நடந்த சம்பவங்களையும் வேடிக்கை பார்த்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக