செவ்வாய், 20 ஜூன், 2017

கோவையில் நீதிபதி கர்ணன் கைது Justice Karnan arrested in Coimbatore by West Bengal police

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொல்கத்தா போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணணுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதித்திருந்தது உச்சநீதிமன்றம். நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்ணன் தலைமைறைவாக இருந்து வந்தார். இதற்கிடையில், கொல்கத்தா நீதிபதியாக இருந்த கர்ணன் கடந்த 12ம் தேதி ஓய்வு பெற்றார். கொல்கத்தா போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்ணனை கைது செய்ய தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கோவை அடுத்த பொள்ளாச்சியில் உள்ள மலுமிச்சம்பட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக