சனி, 17 ஜூன், 2017

Helmut Kohl இரு ஜெர்மனிகள் இணைத்ததில் முதன்மை வகித்த முன்னாள் அதிபர் காலமானார்

முன்னாள் அதிபர் மறைவு!முன்னாள் மேற்கு ஜெர்மனி மற்றும் ஒருங்கிணைந்த ஜெர்மனியின் அதிபராகவும் இருந்த ஹல்மட் ஹோல் நேற்று உடல்நலமின்றி இறந்தார்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஜெர்மனி நாடு இரண்டாக உடைந்ததையடுத்து, கம்யூனிச கொள்கையில் கிழக்கு ஜெர்மனியும், மேற்கத்திய கொள்கையில் மேற்கு ஜெர்மனியுமாகப் பிரிந்தது. அதில், கிழக்கு ஜெர்மனிக்குக் கிழக்கு பெர்லினும், மேற்கு ஜெர்மனிக்கு பான் நகரும் தலைநகர்களாக இருந்தன. மேலும், பெர்லின் நகரில் இரு நாடுகளையும் பிரித்து, தடுப்பு சுவரும் எழுப்பப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலக நாடுகளின் பொருளாதாரநிலை தலைகீழாக மாறியது. அதையொட்டி, கிழக்கு ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வறுமை அதிகரித்தது. ஆனால், மேற்கு ஜெர்மனியிலோ தொழில்வளம் பெருகியது. அதையடுத்து, கிழக்கு ஜெர்மனியில் இருந்து பலர், மேற்கு ஜெர்மனிக்கு வேலைதேடியும், பொருளாதாரநிலை மாறவேண்டியும் இருநாடுகளுக்கிடையே இருந்த தடுப்புச்சுவரைத் தாண்டிக் குதித்து தப்பியோடினர். மேலும், கிழக்கு ஜெர்மனி மக்களும், மேற்கு ஜெர்மனியுடன் இணைவதற்கு விரும்பினர். ஆனால், கொள்கை ரீதியாக அமெரிக்காவும், ரஷ்யாவும் வேறுபட்டிருந்ததால் ஜெர்மனி நாடுகள் ஒன்று சேர்வதற்கு முட்டுக்கட்டை போட்டன. இவர் இலங்கையில் சுனாமியின் போது அங்கு இருந்தார்.பின்பு 90 கோடி ரூபாய்  நிதி உதவியில் (900-million rupee) மருத்துவமனை ஒன்றை அங்கு உருவாக்க முயற்சித்தார் .. அங்கு நிலவிய நிர்வாக சீர்கேட்டால் அது கைகூடாமல் போய்விட்டது ..

இந்நிலையில், கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியைச் சேர்ந்த ஹல்மட் ஹோல் மேற்கு ஜெர்மனி அதிபராக இருந்தார். அவர், பிரிந்து கிடந்த இரு நாடுகளையும் மீண்டும் இணைக்க பெரும் முயற்சி செய்தார். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட பனிப்போரால் இரண்டாகப் பிரிந்த ஜெர்மனி இவரது முயற்சியால் சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு (1945-1989) மீண்டும் இணைந்தது. ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமைக்காக அவர் எடுத்த பகீரத பிரயத்தன முயற்சி என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பலனாக அவரது ஆட்சிக் காலத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரண்டாகப் பிரிக்கப்பட்ட பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருநாடுகளும் மீண்டும் ஒன்றாகின.
அதன் பிறகு, 1990-ஆம் ஆண்டு கிழக்கு, மேற்கு ஜெர்மனி நாடுகள் இணைந்தன. கடந்த 1990 முதல் 1998-ஆம் ஆண்டு வரை, ஒருங்கிணைந்த ஜெர்மனிக்கும் ஹல்மட் ஹோலே அதிபராக இருந்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, 16 வருடங்கள் ஜெர்மனியின் வேந்தராக இருந்த ஹெல்முட் கோல் லட்விக்‌ஷாபனில் உள்ள அவரது வீட்டில் காலமானார். கோலின் மறைவுக்கு அவர் தலைவராக இருந்த கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி அதன் ட்விட்டர் பக்கத்தில், வருத்தத்தில் இருப்பதாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. ஹல்மட் ஹோலின் மனைவி ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக