திங்கள், 12 ஜூன், 2017

நீதிபதி கர்ணன் பணி ஓய்வு! brahminical hegemony of the judiciary .. Kiruba Munusamy

Kiruba Munusamy: Today Justice Karnan's 62nd birthday that turns to be his retirement day as well. He is the first high court judge to move the National Commission for SC/STs for the complaint of harassment by the fellow judges. He is the first judge to be ordered by the Supreme Court of India to undergo mental health checkup. He is the first high court judge to miss his farewell and not to deliver his final speech as a judge. As a consequence of his retirement, all his constitutional immunities have come to an end. The toughest we challenge the brahminical hegemony of the judiciary should commence from now on!
தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணன் பணி ஓய்வு!:உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தலைமறைவாகியுள்ள கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்று ஜூன் 12ஆம் தேதி பிரிவு உபசார விழா இன்றி பணி ஓய்வு பெற்றார்.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளுக்கு எதிராக பல உத்தரவுகள் பிறப்பித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சர்ச்சைக்கு பெயர்போனவர். நீதிபதி சி.எஸ்.கர்ணன் 1955ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கர்நத்தம் கிராமத்தில் பிறந்தவர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில், உச்ச நீதிமன்றம், நீதிபதி கர்ணனை கொல்கத்தா மாநில உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் தடைவிதித்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து, அவரை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது.
இது தொடர்பாக நீதிபதி கர்ணன், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் கடிதங்களை அனுப்பினார்.
நீதிபதி கர்ணனின் இத்தகைய நடவடிக்கைகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும், நீதிபதி கர்ணன் மீதான இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகிய 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அரசியல் சாசன அமர்வு நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இரண்டு முறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, கர்ணன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக நீதிபதிகள் 7 பேரும் தலா ரூ.2 கொடி என்று ரூ.14 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார். நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து மேற்குவங்க காவல்துறை அதிகாரிகள் கர்ணன் வீட்டுக்கு வந்து பிடி வாரண்ட் உத்தரவை கொடுத்த போது அதை வாங்க மறுத்தார்.
இதையடுத்து, நீதிபதி கர்ணன் மார்ச் 31ம் தேதி டெல்லி உச்ச நீதிமன்றத்தின் தனி அறையில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மற்றும் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
அப்போது நீதிபதிகள், கர்ணனின் விளக்கம் தெளிவில்லாமலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது. அதனால், அவர் நான்கு வாரங்களுக்குள் எழுத்துப் பூர்வமாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்த உத்தரவையடுத்து, நீதிபதி கர்ணன், தான் இனிமேல் இந்த வழக்கில் நேரில் ஆஜராக மாட்டேன் என்று கூறியதோடு, நீதிபதிகள் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறிவிட்டனர். அதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, நீதிபதி கர்ணனை மன நல மருத்துவ பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்களுடன் ஒத்துழைக்க மறுத்த கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கும் மன நல மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால், நீதிபதிகளுக்கு இடையேயான இந்த சர்ச்சை உச்சகட்ட வெப்பநிலைக்கு சென்றது.
இந்நிலையில், மே 8ஆம் தேதி நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேரும் தன்னை அவமதித்ததன் மூலம், அவர்கள் 1989ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறிவிட்டனர். அதனால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்ததோடு, மேற்கு வங்க காவல்துறை உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த நீதிபதி கர்ணன் தலைமறைவானார். அவரைக் கைது செய்ய சென்னை வந்த கொல்கத்தா காவல்துறையினர், கர்ணன் ஆந்திராவில் உள்ள காளஹஸ்திக்கு சென்றுவிட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில் தடா, காளஹஸ்திக்குச் சென்று அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி கர்ணனின் சொந்த ஊரான கர்நத்தத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி கர்ணன் சார்பில் வழக்கறிஞர் மேத்யூ பரம்பரா உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க மறுத்ததோடு உத்தரவைத் திரும்பப் பெற முடியாது என்று நீதிபதிகள் கறாராகக் கூறிவிட்டனர். இதையடுத்து, நீதிபதி கர்ணனின் மகன் சுகன் மே 20ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று, தனது தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனு அளித்தார்.
இவ்வாறாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுகளும், கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளும் ஒரு சர்ச்சைத் தொடர்கதையாக நடந்துகொண்டிருக்கையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தனது பணி நிறைவு வயதை அடைந்து இன்று பணி ஓய்வு பெற்றார். வழக்கமாக ஒரு நீதிபதி பணி ஓய்வு பெற்றால் நீதிமன்றம் அவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்துவார்கள். ஆனால், நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருப்பதால் பிரிவு உபசார விழா ஏதுமின்றி இன்று ஜூன் 12ஆம் தேதி ஓய்வு பெற்றார். நீதித்துறை வரலாற்றில் ஒரு நீதிபதி தலைமறைவாக இருக்கும்போது பணி ஓய்வு பெறுவது இதுவே முதல்முறை.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக