வியாழன், 15 ஜூன், 2017

ஸ்டாலின் கட்சியினரோடு கலந்து ஆலோசிப்பதில்லை? எதிலும் தன்னிச்சையே .. உபிக்கள் முணுமுணுப்பு?

கூவத்தூரில் எம்.எல்.ஏ.-க்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக நேற்று சட்டமன்றத்தில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். வெளியில் வந்து மறியலிலும் ஈடுபட்டனர். வெளிநடப்பு செய்வது பற்றியோ, மறியலில் ஈடுபடுவது பற்றியோ முன்கூட்டியே தகவல் எதுவும் யாருக்கும் சொல்லப்படவில்லையாம். ஆனால்,, ஸ்டாலினுக்கு நெருக்கமாக உள்ள சிலருக்கு மட்டும் இது தெரிந்திருக்கிறது. காலையில் சட்டமன்றத்துக்கு வந்த பிறகுதான் இந்த பிரச்னைக்கு குரல் கொடுக்க வேண்டும் என திமுக உறுப்பினர்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது. ‘இப்படியெல்லாம் செய்யணும்னு அவங்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு மட்டும் சொல்லிட்டாங்க. நமக்குச் சொல்லவே இல்லை பாருங்க...’ என மூத்த உறுப்பினர்கள் சிலரே வருத்தப்பட்டனர்.

சாலை மறியலில் உட்கார வந்த துரைமுருகனுக்கு உடல் நிலை சரியில்லை. அவர் அங்கிருந்து கிளம்புவதாக ஸ்டாலினிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால், ஸ்டாலின் அவரை விடவில்லை. ஒரு கட்டத்தில் துரைமுருகனுக்கு கண்கள் கலங்கிவிட்டது. அதன் பிறகே துரைமுருகனை அங்கிருந்து போக அனுமதித்திருக்கிறார் ஸ்டாலின். ‘மறியல் பண்றது... சட்டமன்றத்தில் எதிர்ப்பைக் கிளப்புவது பற்றியெல்லாம் முன்கூட்டியே அவரு திட்டமிட்டு இருந்தால், அதை எங்களுக்கும் சொல்லி இருந்தால், நாங்களும் முன்னேற்பாட்டுடன் வருவோம்.. இப்படித்தான் எதையும் சொல்லாமல் தளபதி செயல்படுறாரு...’ என்று திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் வருத்தப்பட்டுக் கொண்டு போனார்கள்!” மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக