புதன், 21 ஜூன், 2017

அருண் ஜெட்லி :விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய மந்திரி
அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அப்படி ஒரு யோசனை அரசிடம் இல்லை. மாநில அரசுகளின் விவசாயக்கடன் ரத்து அறிவிப்பு தொடர்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. நிதி பற்றாக்குறையை சீரமைப்பது உள்ளிட்டவற்றிலேயே மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. கடன் தள்ளுபடி குறித்து கடந்த வாரம் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தேன். விவசாய கடன்களை ரத்து செய்யும் மாநில அரசுகள், அதற்கான நிதி ஆதாரங்களை அவர்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசு ரூ.74 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக