புதன், 21 ஜூன், 2017

சேலம் பேருந்தில் சிறுமி வன்புணர்வு ! ஆதிதிராவிட ஆணையர்கள் நேரில் விசாரணை.!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த 4ம் தேதி தனியார் பேருந்தில் 15 வயது சிறுமி (girl-rape-salem) கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஓமலூரில் ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் முதுநிலை உறுப்பினர்கள் இனியன், லிஸ்டர் ஆகியோர் இன்று சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்குள்ள கிராம மக்களிடம் நடந்த விவரங்கள் பற்றி கேட்டறிந்தனர். பினனர், ஓமலூர் காவல் நிலையம் சென்று பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பேருந்தை ஆய்வு செய்தனர். மேலும், வழக்கு சம்பந்தமான விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் பின் ஆணையத்தின் உறுப்பினர் இனியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை இனிமேல் வேறு யாருக்கும் நடைபெறக்கூடாது.
இந்த வழக்கில் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பணம் வழங்கியுள்ளது. பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக