சனி, 17 ஜூன், 2017

பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி கவிழ்தது இப்படிதான் ....

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் (video leaked for shocking in panneerselvam) பன்னீர் அணியை சேர்ந்த எம்எல்ஏ சரவணன் பேசியிருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வீடியோவில் சரவணன் பன்னீர் அணியை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியிருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளதால் பன்னீர் அணி கடும் அப்செட்டில் இருக்கிறதாம். மேலும் எடிட் செய்யப்படாத முழுமையாக வீடியோவை பார்த்தவர்கள் கூறுகையில் அந்த வீடியோவால் பன்னீர் அணிக்கு தான் பின்னடவை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார்கள். அந்த வீடியோவில் வெளிவராத ரகசியங்கள் என்ன தெரியுமா? அதில், பன்னீர் அணி குறித்து சரவணன் பேசுகையில், அம்மாவால் ஒதுக்கப்பட்ட கூட்டணி என்றும் அம்மாவின் நம்பிக்கையை இழந்த பன்னீர், முனுசாமி, நத்தம் ஆகியோர் சேர்ந்து அணியை அமைத்திருக்கிறர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகும் என்பது பத்து நாட்களுக்கு முன்பே பன்னீர் அணிக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். பன்னீர் அணி மக்களிடம் செல்வாக்கு பெற ஒரே காரணம், அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதே. அதாவது, அம்மாவின் மரணத்தில் மர்மம் ஏதுமில்லை, அதை வைத்து பன்னீர் அணி அரசியல் நடத்திட்டு இருக்காங்க என்று பேசியிருக்கிறாராம். இது பன்னீரை பதறவிட்டிருக்கிறது என்கிறார்கள். சரவணன் எம்எல்ஏ கூவத்தூரிலிருந்து பன்னீர் அணிக்கு வரும் போது நத்தம் விஸ்வநாதனிடம் உங்க அணியில ஜாயிண்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னாராம். அதற்கு நத்தம் அங்கு நடக்குற விஷயங்களை மீடியாக்களில் சொல்லிட்டு வா என்று கூறினாராம். இவை அனைத்தையும் அடியோடு மறுத்து பன்னீர்செல்வத்திடம் புலம்பி இருக்கிறாராம். ‘வீடியோவில் இருக்குறது நாந்தான். ஆனா இப்படியெல்லாம் பேசலண்ணே. திட்டம்போட்டு பெருசா டிரிக் பண்ணி இப்படி செஞ்சிருக்காங்க என்று புலம்பினாராம். இதை ஒரு டிரம்ப் கார்டாக பயன்படுத்தி பன்னீர் அணியை வளைக்க எடப்பாடி அணி முயற்சி செய்கிறதாம். எதிர்கட்சிகள் இதை பற்றி விவாதம் நடத்தாம நாங்க தடுக்கிறோம், பரிகாரமா நீங்க எங்களை இப்போதைக்கு சைலண்டா சப்போர்ட் பண்ணுங்க, கூடிய சீக்கிரம் வெளிப்படையா பார்த்துக்கலாம் என்று நிபந்தனையை விதித்திருக்கிறார்களாம். இதனால் நிபந்தனையில்லாமல் மெதுவாக எடப்பாடி அணியுடன் வெளிப்படையாக கைகோர்க்கும் நாள் விரைவில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக