செவ்வாய், 20 ஜூன், 2017

போஜ்பூரி நடிகை அஞ்சலி ஸ்ரீ வாஸ்தவா தூக்கில் ... தற்கொலையா? கொலையா?

பிரபல போஜ்புரி இளம் நடிகை அஞ்சலி ஸ்ரீவஸ்தா தனது மும்பை வீட்டில்
தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 29 ஆகும். கெஹு த தில் மெய்ன் பா என்ற போஜ்புரி படத்தில் இறுதி காட்சியில் கடைசியாக நடித்துள்ளார். நடிகை அஞ்சலி ஸ்ரீவஸ்தா மும்பை ஜூஹூ பகுதி, பரிமல் சொசைட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் அலஹாபாத்தில் வசித்து வருகின்றனர்.
;இவர் படப்பிடிப்புக்கு வசதியாக மும்பையில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நடிகை அஞ்சலி ஸ்ரீவஸ்தாவிடம் பேச அவரது பெற்றோர்கள் அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டனர. ஆனால் நீண்ட நேரமாக அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.


;இந்நிலையில் நேற்று காலையும் அஞ்சலியை தொடர்பு கொண்டனர். ஆனால் அப்பொழுதும் அஞ்சலியை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் தங்கள் மகள் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து தங்களால் அஞ்சலியை தொடர்புகொள்ள முடியவில்லை நேரில் சென்று பார்த்து தகவல் சொல்லுங்கள் என கூறியுள்ளனர்.

;இதனையடுத்து நடிகை அஞ்சலி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றொரு சாவியால் வீட்டை திறந்து பார்த்தபோது அஞ்சலி வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.<>பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகை அஞ்சலி ஸ்ரீவஸ்தவா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்டுனியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக