ஜூனைத் வேறு யாருமில்லை.நம்மைப் போல் ஒருவன்.நாம் எப்படி தீபாவளி,
பொங்கல் பண்டிகைகளுக்கு கிராமத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் நகரங்களுக்குச் சென்று உடையும்,பட்சணமும் வாங்கிக் கொண்டு உற்சாகமாய் ஊருக்குத் திரும்புவோமோ,அதைதான் அரியானாவின் குக்கிராமத்தில் இருந்து டெல்லி வந்துசெய்துவிட்டுத் திரும்பி இருக்கிறான் அவனும்.
முதலில் ஜூனைத் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.நாம் இங்கே பாய்மார்களிடம் பிரியாணி கேட்டு அன்பும் வம்பும் செய்து கொண்டிருந்த அதே நாளில்தான் அவனொரு துலுக்கன் என்பதற்காக மட்டுமே டெல்லி ரயிலில் கொல்லப்பட்டான்.
ஒரு பதின்ம வயது சிறுவனைச் சதக் சதக் என்று கத்தியால் குத்துவதற்கு மித
மிஞ்சிய மதவெறி இருந்தால் மட்டுமே முடியும்.கத்தியைத் தொடுவதற்கும் தைரியம்
வரும்.அவன் தலையில் இருந்த குல்லாவைக் கீழே போட்டு மிதிப்பதற்கு
உடலெங்கும் இந்துத்துவா ரத்தம் ஓடிக் கொண்டிருந்தால் மட்டுமே அப்படி
யோசிப்பதற்குத் தோன்றும்.
இந்து என்பவன் வேறு.இந்துத்துவா என்பது வேறு.இந்து என்பவன் இதை படிக்கும் போது சோக ஸ்மைலியை அழுத்த நினைப்பவன்.இந்துத்துவா என்பவன் இந்த துலுக்க பசங்களுக்கு இதெல்லாம் வேணும் என்று வன்மமாய்ச் சிரிப்பவன்.இதுவே வித்தியாசம்.
டெல்லி ரயிலில் ஜூனைத் இருக்கைத் தகராறுக்குக் கொல்லப்படவில்லை.அவன் இந்த அகன்ற இந்து பாரதத்தில் நாம் ஒண்ணும் செய்ய முடியாது என்று தனது சகோதரனை இழுத்துக் கொண்டு அடுத்த பெட்டிக்கும் ஓடி விட்டான்.ஒரு இருக்கை தகராறில் நீ மாட்டுக்கறி சாப்பிடுபவன்தானே நீ முஸ்லீம் தானே என்று அரக்கத்தனமாக கத்திக் கொண்டு ஜூனைத் இதயத்தில் கத்தி சொருக மாட்டார்கள்.
பசு புனிதம் என்றும் முஸ்லீம்கள் அசுத்தமானவர்கள் என்றும் மதவெறியர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களால்த்தான் இப்படித் துரத்தி துரத்தி ஒரு சிறுவனைக் கொல்ல முடியும்.ஜூனைத் மதவெறியர்களால் கொல்லப்பட்டு விட்டான்.அவனது தாய் ஜைரா அழுதுகொண்டிருப்பதை வீடியோவில் பார்த்தேன்.அவளும் வேறு யாருமில்லை.நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் வெளியுலகம் தெரியாத நம் அம்மாவை போல் ஒரு அம்மா.
பா.வெங்கடேசன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக