வியாழன், 22 ஜூன், 2017

எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார்? திருமதி .சோனியா காந்தி திருமதி மீராகுமார் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாராளுமன்ற முன்னாள்
சபாநாயகர் மீராகுமார் நேற்றிரவு அவருடைய இல்லத்தில் திடீரென சந்தித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் மீராகுமார் சந்திப்பு புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் கூடி முடிவு செய்கின்றன. இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாக ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க தொடங்கி இருக்கின்றன. இதனால் அக்கட்சிகள் இடையே விரிசல் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் நேற்றிரவு அவருடைய இல்லத்தில் திடீரென சந்தித்தார்.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மீராகுமாரின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் சோனியாவை சந்தித்தது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக