நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தவிர மற்ற அமைச்சர்களும், எம்எல்ஏ.க்களும் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செய லாளர் டிடிவி தினகரன் கட்டுப் பாட்டில் உள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்துக்கு நேற்று காலை வந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அதிமுகவுக்கு தலைமை தாங் கும் ஆற்றலும், ஆளுமையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் தினகரனிடம் மட்டுமே உள்ளது. இதனை உணர்ந்துதான் எம்பி., எம்எல்ஏ.க்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் தினகரன் தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என அவரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர் டி.ஜெயக்குமார் மட்டும்தான் அவருக்கு எதிராக பேசி வருகிறார். அமைச்சர்கள் சார்பாக பேசுவதாகக் கூறி தன்னை தக்க வைத்துக் கொள்ள பார்க்கிறார்.
ஜெயக்குமார் நன்றி மறந்து பேசி வருகிறார். அவரைத் தவிர மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் தினகரன் கட்டுப் பாட்டில்தான் உள்ளனர். தேர்தலை சந்திக்க எந்த வொரு எம்எல்ஏ.வும் விரும்ப மாட்டார்.
எனவே, 2 மாதத் தில் தேர்தல் வரும் என்ற மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனின் கனவும், எப்படி யாவது முதல்வராகி விடலாம் என்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவும் நன வாகாது. இரட்டை இலை சின்னத்தை மீட்டு சீனப்பெருஞ்சுவர் போல அதிமுகவை தினகரன் கட்டிக்காப் பார். அதிமுக இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை. தின கரனை ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார். tamilthehindu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக