வியாழன், 1 ஜூன், 2017

வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!

thetimestamil.com :வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அட்டவணை குறைந்துள்ளதாக டாய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளதே காரணம் என செய்தி தெரிவிக்கிறது.
ஜனவரி-மார்ச் மாதத்துக்கான பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட 1 சதவீதம் குறைவு. பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பார்த்த அளவு 7.1 சதவீதம் ஆகும். சீனாவின் வளர்ச்சி சதவீதமான 6.9 விட இது குறைவாகும். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டின் வளர்ச்சி சதவீதமான 6.0விட தற்போதைய காலாண்டின் வளர்ச்சி சதவீதம் குறைவு எனவும் ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பரில் அறிவித்த ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவு எதிர்பாராத பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐசிஐசிஐ நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பிரசன்னா, ‘இந்த டேட்டாக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. நவம்பருக்கு பிறகான பணத்தாள் விவகாரம் காரணமாகக்கூடும்’ என்கிறார்.

மோடியின் எதிர்பாராத முடிவு வரி செலுத்தப்படாத பணத்தை வெளிக்கொணரும் என கருதப்பட்டது.  நேரடியாக பணத்தாள்களை செலுத்தி தங்களுக்கு தேவையானதை பெரும்பாலானவர்கள் பெற்றுக்கொள்ளும் நிலையில் அது எதிர்விளைவையே ஏற்படுத்தியது.
source:in.reuters.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக