திங்கள், 12 ஜூன், 2017

ஆணும் பெண்ணும் ஒரு இரவு தங்கலாம் ... சட்டம் கட்டுப்படுத்தாது

வெளிநாடுகளில் ONE NIGHT STAND என்ற ஒரு வார்த்தை உள்ளது. இதன் பொருள் ஒரு பெண்ணுடன், ஒரு ஆண் ஒரு நாள் மட்டும் உடலுறவு கொள்ளுதல். அதாவது அந்த சம்பவத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இருக்காது. இப்படி ஒரு பெண்ணுடன், ஒரு ஆண் இருந்து, அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்து விட்டால், சட்டப்படி அந்த குழந்தை அந்த ஆணுடைய குழந்தை அல்ல என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மிருதுளா பட்கர் கூறியுள்ளார். அதாவது விருப்பத்தின் பேரிலோ, அல்லது சூழ்நிலையின் காரணமாகவோ, அல்லது ஒரு விபத்தாகவோ ஒரு பெண்ணை, அவளுடைய சம்மதத்தின் பேரில், ஒரு ஆண் உடலுறவு கொண்டால், அந்த பெண் இந்து திருமணச் சட்டத்தின்படி அவனுடைய மனைவியாக முடியாது என கூறியுள்ளார்.
அதே போல் அந்த பெண்ணிற்கு பிறக்கும் குழந்தையும் இந்து திருமணச் சட்டத்தின்படி, அந்த ஆணுடைய வாரிசாக முடியாது என்றும் கூறியுள்ளார்.லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக