வியாழன், 8 ஜூன், 2017

கேரளாவில் மதுவிலக்கு நீக்கம் ? பின்வாங்கும் அரசு!

திருவனந்தபுரம்: கேரளாவில் அமலில் உள்ள மது விலக்கை வாபஸ் பெறுவது என்று மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதன் முதல்படியாக, ஆண்டுதோறும் பத்து சதவீத மதுக்கடைகளை மூடுவது என்று முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதன்படி அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி 2013-ஆம்  ஆண்டு இதற்கான உத்தரவை பிறப்பித்தர். அதன்படி மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்கள் என 730 கடைகள் மூடப்பட்டன. 
ஆனால் தற்போதைய இடதுசாரி முன்னணி ஆட்சியானது  கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. எனவே அதில் இருந்து விடுபடுவதற்கு மதுவிலக்கை வாபஸ் பெற்று, மூடப்பட்ட மதுபான பார்களை திறப்பது ஒன்றே வழி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான முடிவு இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் மூடப்பட்ட 730 மதுபான பார்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மேலும் இந்த பார்களில் கள் விற்பனை செய்யவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
ஆனால் அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக