கடந்த சில நாட்களாக பாலில் கலப்படம்
செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை, மக்களும் பால் விநியோகிப்பாளர்களும்
தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலில் ஏதேனும் கலப்படம்
செய்யப்படுகிறதா...என்பதை ஆராய, நேற்று ( ஜுன்-8) மதுரையில் 'பரிசோதனை
முகாம்' மேற் கொள்ளப்பட்டது. இதில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டு
இருக்கும் மொத்தம் 100 வார்டுகளில், இருந்து 108 பால் மாதிரிகள்
எடுத்துவரப்பட்டு கோ. புதூர் என்னும் இடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இந்த முகாமுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமை வகித்தார்.
இதில் கோச்சடை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட பால் மாதிரியில் மட்டும்,
சோப்பு கலக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதுகுறித்து விசாரித்த
அதிகாரிகளுக்கு பாலில் நுரை ஏற்படுத்துவதற்காக, சோப்பு துகள்கள்
கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பாலில் இதுவரை கலந்துகொண்டிருந்தநீரை
விட, சோப்பு துகள்கள் கலக்கப்பட்டிருக்கும், இச்சம்பவம் தமிழகம் முழுக்க
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பாலில் சோப்பு கலக்கப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ' பாலில் கலப்படம் இருப்பது மிக வருந்தத்தக்கது. கூடியவிரைவில், இவ்வாறு கலப்படம் ஏற்படாமல், மக்களுக்கு விநியோகிக்கும் அனைத்து வகையான பாலும் பரிசோதனைக்கு உட்படும்' என்றார். minnambalam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக