வெள்ளி, 2 ஜூன், 2017

கலைஞர் வைரவிழா மலரை பார்க்கும் .. விடியோ லீக்கானது அல்லது வெளியானது ?


சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் விழாவோடு, அவரது சட்டப்பேரவை வைர விழாவையும் சேர்த்து சிறப்பாக கொண்டாட தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (ஜூன் 3–ந் தேதி) மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்கிறார். இந்த விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு சட்டப்பேரவை வைர விழா அழைப்பிதழை கருணாநிதியிடம் நேரில் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்தநிலையில், சட்டப்பேரவை வைர விழா மலரை இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் நேரில் காண்பித்தார். 


ஒவ்வொரு பக்கங்களாக ஸ்டாலின் காட்டினார். அதை கருணாநிதி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஸ்டாலின் உடன் கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன் இருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையீரலில் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் எளிதாக சிரமம் இன்றி சுவாசிக்கும் வகையில் கடந்த மாதம் தொண்டையில் சுவாசக்குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது.< உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சமீபத்தில் இந்த செயற்கை சுவாசக் குழாய் அகற்றப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் பேச பயிற்சி அளித்து வருகின்றனர். மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக