புதன், 14 ஜூன், 2017

பன்னீர்செல்வம் அணி எடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது

சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் அணியினர் வாக்களித்தனர். பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியது, முதல் நாளான இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மானிய கோரிக்கைள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சுற்றுச்சுழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் பதில் அளித்தனர். தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்த பிறகு மானிய கோரிக்கைள் மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது பன்னீர்செல்வம் அணியினர் உட்பட அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எம்.எல்.ஏக்கள் விலைபேசப்படுவதாக கூறிய திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் அதிமுகவின், இரு அணிகளும் ஒற்றுமையாக வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.நக்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக