வியாழன், 15 ஜூன், 2017

பாஜகவின் மாட்டுகொள்கை .. அவுஸ்திரலியா இறைச்சி வர்த்தகர்கள் மகிழ்ச்சி


இந்திய அரசு அறிவித்திருக்கும் மாடு வெட்டத் தடை! ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கு ஆதாயம்!” மோடி அரசின் அறிவிக்கை வெளிவந்தவுடன் மகிழ்ச்சி பொங்கும் இந்தச் செய்தி ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியானது.
ந்திய அரசு அறிவித்திருக்கும் மாடு வெட்டத் தடை! ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கு ஆதாயம்!” மோடி அரசின் அறிவிக்கை வெளிவந்தவுடன் மகிழ்ச்சி பொங்கும் இந்தச் செய்தி ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியானது.
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவும் பிரேசிலும்தான் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா ஆண்டொன்றுக்கு 37 லட்சம் டன் மாட்டிறைச்சி உற்பத்தி செய்கிறது. இதில் 20 லட்சம் டன் உள்நாட்டில் நுகரப்படுகிறது. மீதமுள்ள 17 இலட்சம் டன் ஏற்றுமதியாகிறது. இது உலகச் சந்தையின் தேவையில் 20% ஆகும். மோடி அரசின் அறிவிக்கையின் விளைவாக, இந்தச் சந்தையை ஆஸ்திரேலியா கைப்பற்றிக்கொள்ள முடியும் என்று சந்தை ஆய்வாளர் சைமன் குவில்டி கூறுவதாகக் குறிப்பிடுகிறது
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “ஓக்லந்து டைம்ஸ்” நாளேடு. மாட்டிறைச்சி மட்டுமின்றி உலகத் தோல் சந்தையில் 13 விழுக்காட்டையும் இந்தியா இழக்கும் என்று குவில்டி குறிப்பிடுகிறார்.
“இறைச்சிக்கூடங்கள் தமக்குத் தேவையான மாடுகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குவதை இந்த அறிவிக்கை தடுக்கவில்லை என்பதால், இறைச்சித் தொழிலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று பா.ஜ.க.வினர் சாமர்த்தியமாகப் பேசுகின்றனர். பிரச்சினை பண்ணைகளுக்கில்லை, விவசாயிகளுக்குத்தான்.
“இறைச்சிக்கூடங்களுக்கான 90% மாடுகள் சந்தை வழியாகத்தான் வருகின்றன. ஒவ்வொரு விவசாயியாகத் தேடிப்பிடித்து மாட்டைக் கொள்முதல் செய்வதென்பது நடைமுறை சாத்தியமற்றது. இந்த அறிவிக்கையை அப்படியே அமல்படுத்தினால் இறைச்சி ஏற்றுமதி 10 அல்லது 20 விழுக்காடாக வீழ்ந்து விடும்” என்கிறார் அனைத்திந்திய இறைச்சி ஏற்றுமதியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.பி.சபர்வால்.
இந்தியா முழுவதும் இறைச்சித் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 22 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஆண்டொன்றுக்கு 22,500 கோடி ரூபாய் மாட்டிறைச்சியும், 34,000 கோடிக்கு தோல் பொருட்களும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. மோடி அரசின் இந்த அறிவிக்கை வெளிவந்தவுடன் “ஆஸ்திரேலியாவிலும் பிரேசிலிலும் உள்ள நமது போட்டியாளர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உலகச் சந்தையில் இந்தியாவின் பங்கு முழுவதையும் அவர்கள் கைப்பற்றிவிட முடியும்” என்கிறார் சபர்வால்.
அதானிக்கு நிலக்கரியைக் (சுரங்கத்தை) கொடுத்த ஆஸ்திரேலிய அரசுக்கு, மாட்டுக்கறியை மொய் எழுதுகிறதா மோடி அரசு?  வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக