திங்கள், 12 ஜூன், 2017

ரஜினி கட்சியின் பெயர் .... ஏதோ படை... யாம் .. தமிழக முன்னேற்ற படை?

காலா’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை மும்பையில் முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, கட்சி தொடங்குவது குறித்தான தனது இரண்டாம்கட்ட ஆலோசனையைத் தொடங்கிவிட்டார். ஏற்கெனவே பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சில கட்சிப் பிரமுகர்கள், இயக்கத் தலைவர்கள் ஆகியோரை தன் இல்லத்துக்கு அழைத்து ஆலோசித்த ரஜினிகாந்த், மீண்டும் அதேபோன்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தான் சந்தித்தச் சிலரை மீண்டும் சந்திக்கும் ரஜினி, தனக்கு நெருக்கமான சட்டமன்ற உறுப்பினர்களைக்கூட இப்போது புதிதாக சந்தித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அதிமுக-வில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் ரஜினி சந்தித்து பேசியிருக்கிறார். ரஜினியை சந்தித்த சிலரிடம் நாம் பேசியபோது, “ரஜினி கட்சி ஆரம்பிப்பதில் மிகத் தெளிவாக, உறுதியாக இருக்கிறார். எங்களிடம் அவர் பேசியதிலிருந்து மோடியை வெகுவாக சிலாகிக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், நிச்சயமாக அவரது அழைப்பை ஏற்று பாஜக-வில் சேரும் எண்ணம் எல்லாம் ரஜினிக்கு இல்லை. தனிக்கட்சிதான். அதுவும் பாஜக-வுடன் கூட்டணியா என்பதிலும் அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.
மேலும் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருக்காமல், 2019 நாடாளுமன்றத் தேர்தலையே தனது கட்சியின் முதல் தேர்தலாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்காக கட்சியை விரைவில் ஆரம்பிக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். மேலும், தன் கட்சிக்கு பெயர் வைப்பது குறித்துதான் இப்போது முக்கிய ஆலோசனையில் இருக்கிறார் ரஜினி. கட்சியின் பெயரில் ‘படை’ என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். அதற்கான ஆலோசனைதான் இப்போது அவர் வீட்டில் தீவிரமாக நடக்கிறது’’ என்றனர். ஒருவேளை படையப்பா கட்சியாக இருக்குமோ?   மின்னம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக