செவ்வாய், 13 ஜூன், 2017

மும்பை மாடல் நடிகை கிருத்திகா கொலை .. அழுகிய நிலையில் பிணமாக ...

டிவி சீரியல் மும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகையும், மாடலுமான க்ரித்திகா சவுத்ரி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் க்ரிதிக்கா சவுத்ரி(23). பாலிவுட் நடிகையாக ஆசைப்பட்டு மும்பை வந்து வீடு எடுத்து தங்கியிருந்தார்.
கங்கனா ரனாவத் நடித்த ரஜ்ஜோ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் க்ரித்திகா. ரஜ்ஜோ படம் மட்டும் இன்றி பாலாஜி ப்ரொடக்ஷன் டிவி சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார். நடிப்பு தவிர மாடலிங்கும் செய்து வந்தார். பாலிவுட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை க்ரித்திகா மும்பையில் அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்தார். அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


போலீஸ் போலீஸ்

க்ரித்திகாவின் வீட்டுக் கதவு வெளியே இருந்து பூட்டியிருந்தது. போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது க்ரித்திகா அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை

க்ரித்திகா இறந்து 3 முதல் 4 நாட்களாகியுள்ளது என்றும், அவரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக