ஞாயிறு, 4 ஜூன், 2017

கலைஞர் பிறந்த நாள் கேக் கோபாலபுரத்தில் குடும்பத்தினரோடு ...

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் 'கேக்' வெட்டி கொண்டாடினர். கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சி யில் பிறந்த நாள் கேக்கை கருணாநிதிக்கு, அவரது மகள் செல்வி ஊட்டினார். மாலையில், கருணாநிதியை பாராட்டி நடந்த பிரம்மாண்ட விழாவில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட, பல தலைவர்கள் பங்கேற்றனர். சென்னை, கோபாலபுரம் வீட்டில், நேற்று கருணாநிதியின் பிறந்த நாளை, அவரது மனைவி தயாளுவுடன், குடும்ப உறுப்பினர்கள், 'கேக்' வெட்டி கொண்டாடினர். பின், பிறந்த நாள் கேக் துண்டை, தந்தை கருணாநிதிக்கும், தாய் தயாளுவுக்கும்,மகள் செல்வி ஊட்டினார். இதில், மகன் ஸ்டாலின், மருமகள் துர்கா, மகள் செல்வி, மருமகன் செல்வம், மகன் தமிழரசு, துணைவி ராஜாத்தி, மகள் கனிமொழி, பேரன் ஆதித்யா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஐ.பெரியசாமி, மைதீன்கான், பெரியகருப்பன், சுரேஷ்ராஜன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர் கள் பலரும், கருணாநிதியை சந்திக்க விரும்பினர். அதேபோல், காங்.,ஐ சேர்ந்த முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட சிலரும், சந்திக்க அனுமதி கேட்டனர். ஆனால், யாருக் கும் கருணாநிதியை சந்திக்க அனுமதி தரப்பட வில்லை. அதனால், அவர்கள் ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதி பிறந்த நாளுக்கு வாழ்த்துதெரிவித்துச் சென்றனர்.

அதேபோல, கோபாலபுரம்வீட்டின் முன் நின்றிருந்த கனிமொழியிடம், மகளிர் அணி யினர் வாழ்த் துக்களை தெரிவித்தனர். கருணாநிதிக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, கவர்னர் வித்யா சாகர் ராவ் ஆகி யோர், வாழ்த்து கடிதங்களை அனுப்பி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, கேரள கவர்னர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் ஆகியோரும், கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன், மா இலை, வாழை மர தோரணங்கள் அமைக் கப்பட்டிருந்தன. மின் விளக்குகளாலும், வீடு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 கட்சி பிரமுகர் கள் கொண்டு வந்த சீர்வரிசை மற்றும் பரிசு பொருட்களை வீட்டில் வழங்கிச் சென்றனர். மாலையில், ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் அவரின் சட்டசபை பணி வைர விழாவை முன்னிட்டு, பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் செய லர் டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திரிண முல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி., மஜீத் மேமன், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. - நமது நிருபர் -dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக