வியாழன், 29 ஜூன், 2017

சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்! புகழ் பெற்ற சூலமங்கலம் சகோதரிகள்..

பிரபல ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ஜெயலட்சுமிக்கு வயது 85 ஆகும். சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல் பெசன்ட்நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தில் பிறந்த சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி பாடிய பக்தி பாடல்கள் மிக பிரபலம். இவர்கள் பாடிய கந்த சஷ்டி கவசம் முருக பக்தர்களால் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது. சகோதரிகளில் மூத்தவர் ராஜலட்சுமி தனது 53வது வயதில் 1992ம் ஆண்டில் காலமாகிவிட்டார். 1937ம் ஆண்டில் ஏப்ரல் 24ம் தேதி பிறந்த ஜெயலட்சுமி 85வயது வயதில் மரணம் அடைந்தார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக