பிரிட்டனில் தற்போது ஆட்சியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களுடைய
பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதில் தோல்வி அடைவார்கள் என்று
வாக்களிப்பிறகு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதை, பொது
தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன.>கன்சர்வேடிவ் கட்சியினர், தனிப் பெரும் கட்சியாக
நாடாளுமன்றத்தில் உருவெடுப்பார்கள் என்று கணிப்புகள் காட்டினாலும்,
அவர்களின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிடம் பல இடங்களை
இழந்துவிட்டார்கள் .
இந்த முடிவு பிரதமர் தெரீசா மேவுக்கு மோசமான
முடிவாக அமைந்துள்ளது என்றும் அவர் மீதான பொதுமதிப்பை எப்போதும் மீட்க
முடியாது என்று தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் டாம் வாட்சன்
தெரிவித்துள்ளார்.
மே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னதாக, தனது கட்சியின் பெரும்பான்மையை அதிகப்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையில், தேர்தலை நடத்த எடுத்த முடிவு, நவீன காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய அரசியல் தவறுகளில் ஒன்றாக முடியக்கூடும் என்று பிபிசியில் அரசியல் விவகார ஆசிரியர் தெரிவித்தார்.
வாக்களிப்பைப் பொறுத்தவரை, 2015 தேர்தல் வாக்களிப்பை விட இம்முறை அதிக அளவில் இளம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஸ்காட்லாந்து: ஆளும் எஸ்.என்.பிக்குப் பின்னடைவு
பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில், இதுவரை ஸ்காட்லாந்திலிருந்து வெளிவந்துள்ள முடிவுகள், அங்கு பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற இரண்டாவது கருத்துக் கணிப்பை கோரும் ஆளும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி, பெருந்தோல்விகளை சந்தித்திருப்பதைக் காட்டுகின்றன.>கடந்த பொதுத்தேர்தலில் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி ( எஸ்.என்.பி) அங்கு இருக்கும் நாடாளுமன்ற இடங்களில் மூன்றைத் தவிர அனைத்து இடங்களையும் வென்றது.
ஆனால் இம்முறை மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான தொகுதிகளை அது இழக்கவிருக்கிறது.
எஸ்.என்.பியின் தொகுதிகளை , கன்சர்வேடிவ், தொழிற்கட்சியினர் மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியினர் என அனைத்து கட்சியினரும் பறித்துள்ளனர்.
எஸ்.என்.பியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர், ஆங்கஸ் ராபர்ட்சன், தோற்றுப்போனவர்களில் ஒருவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக