செவ்வாய், 6 ஜூன், 2017

சீமான் ; ஜெயலலிதா ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார்:. ஈழத்தாய் என்பதல்லாம் சும்மாவா?

ஜெயலலிதா தமிழகத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார்: சீமான்.திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:–>தமிழனும் தமிழும் 50,000 ஆண்டுகளுக்கு மூத்தவர்கள் என உலக அறிஞர்களும், நம் முன்னோர்களும் சொல்லி சென்றுள்ளனர். தமிழ்நாட்டை சாதியால் ஆளமுடியாது. என்னிடம் பலர் கேட்கிறார்கள் எம்.ஜி.ஆர்., கலைஞரை எதிர்க்காத நீங்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்போது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று.
ஒட்டு மொத்த தமிழர்களும் சேர்ந்து ஒரு தமிழனை ஆட்சி செய்ய வைக்கமுடியும். யார் வேண்டுமானாலும் இந்த நிலத்தில் வாழலாம். ஆனால் இந்த நிலத்தை தமிழன் தான் ஆளமுடியும்.  தமிழகத்தில் தனிமனித அபிமானிகளை ஒழிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் அரசியல் படிக்க வேண்டும்.
கடந்த எட்டு ஆண்டுகாளாக கத்தினேன். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு தான் தமிழக மக்கள் ஓட்டுப்போட்டீர்கள். அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் வேண்டாம் என நீங்கள் விலகி நின்றால் நாம் யாரை வெறுக்கிறோமோ அவர் தலைமையிலான ஆட்சியின்கீழ் தான் வாழவேண்டி வரும்.

நம் வளங்களை அளித்து வருவதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. அரசு போக்குவரத்து துறையில் ரூ.44,000 கோடி கடன். மின்துறையில் பல ஆயிரம் கோடி நஷ்டம். மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார்.

மிகப்பெரிய கனவுகளோடு நாம் தமிழர் கட்சி தமிழக மக்களுக்காக போராடி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தத்துவங்களை வைத்து ஒருநாள் ஆட்சியை நடத்துவார்கள். இவ்வாறு பேசினார்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக